பக்கம் எண் :
தொடக்கம்
78தொல்காப்பியம் - உரைவளம்

தாங்குமதி வலவ என்றிழிந்தனன்... ... ...
... ... ... ... ... ... ... ... ... ... ... ...
மகனொடு தானேபுகு தந்தோனே யானது
தடுத்தன னாகுதல் நாணி இடத்திவற்
கலக்கினன் போலுமிக் கொடியோ னெனச்சென்
றலைக்குங் கோலொடு குறுக, தலைக்கொண்டு
... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
அழுங்கின னல்லனோ அயர்ந்ததன் மனனே.”

(அகம்-66)
 

இதில், கூடாமலே தலைவி காலையில் ஊடிய திறம் கூறியதறிக.
  

“சேற்றுநிலை முனைஇய” எனும் அகப்பாட்டும் (46)
  

“உணர்குவ னல்லேன், உரையல் நின்மாயம்” எனும் (226-ஆம்) அகப்பாட்டுமதுவே யாம்.
  

2. வைகறை மருதப் பொழுதாதல்
  

“பொதுக்கொண்ட கௌவையிற் பூவணை பொலிந்தநின்
வதுவையுங் கமழ் நாற்றம் வைகறைப் பெற்றதை.”
(கலி -66)
எனவரும் கலிப்பாட்டடியிற் காண்க.
  

3.  இனி எற்பாடு நெய்தற்கு வருதல்.
  

“நெடுவெண்மார்பி லாரம் போல்” எனவரும் (120)
  

அகப்பாட்டாலறிக.
  

11.

நடுவுநிலைத் திணையே நண்பகல் வேனிலொடு
முடிவுநிலை மருங்கின் முன்னிய நெறித்தே
(11)

 

ஆ.மொ.இல.
  

The middle placed ‘Thinai’ is being
thought of when the midday and summer
occur jointly
  

பி.இ.நூ.
  

நம்பி 14.
  

அடுத்த சூத்திரத்துக் காண்க.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்