காரும் மாலையும் முல்லை என்பதுபோல நடுவு நிலைத் திணையே நண்பகல் வேனில் என்றமையாது ‘முடிவுநிலை மருங்கின் முன்னிய நெறித்து’ என மேலும் கூறியதன் சிறப்பாவது தனக்கென நிலமில்லாமையால் பாலை ஒழுக்கமானது நான்கு நிலத்திலும் நிகழ்தலின் செய்யுளில் அமைத்துக்கூறுங்கால் ஏதேனும் ஒரு நிலத்தில் முடிவதாகக்கூறல் வேண்டும். வேண்டினும் தனக்கெனவுரிய நண்பகல் வேனிலொடு அவ்வந்நிலத்தில் முடிவதாகக்கூறல் வேண்டும். அதனால் ஆசிரியர் நடுவுநிலைத்திணையானது நண்பகல் வேனில்களோடு ஏதேனும் ஒரு நிலத்தில் முடியும் நிலைமையுடைய பக்கத்தில் அமைவதாக நூலாரால் கருதப்பட்ட மரபையுடையதாகும் என்றார். |
நெறித்து என்பதால் இது மரபாகச் செய்யப்பட்டுவருவது என்பது புலப்படும். |
12. | பின்பனி தானும் உரித்துஎன மொழிப | (12) |
|
ஆ.மொ.இல. |
The scholars say that the later part Of the snow-season also belong to it |
பி.இ.நூ |
நம்பி.14 |
வேனில் நண்பகல் பின்பனி என்றிவை பான்மையின் உரிய பாலை தனக்கே |
இல.வி.அ.14. |
முன் சூத்திரத்துக் காண்க. |
முத்து.அக.20 |
பின்பனி தானும் உரித்தெனப்படுமே |
இளம்பூரணர் |
12. பின்பனி தானும் . . . . . .மொழிப இஃது, எய்தாதது எய்துவித்தல் நுதலிற்று. |