ஆம். அவ்வாறு கூறியதால் தான் அடுத்துத் திணைமயக்குறுதலும்” ( ) என்றும் கூறநேர்ந்தது என்னலாம். எனினும் இவ்வுரை அத்துணைச்சிறப்பின்று. |
14. | திணைமயக் குறுதலும் கடிநிலை இலவே நிலன் ஒருங்கு மயங்குதல் இல என மொழிப புலன்நன்கு உணர்ந்த புலமை யோரே | 14 |
|
ஆ.மொ.இல. |
The intermingling of ‘thinai’ is not prevented The intermingling of regions is not allowed- Poets well-versed in literature say so. |
பி.இ.நூ. |
நம்பி 251 |
முத்திறப் பொருளும் தத்தம் திணையொடு மரபின் வாராது மயங்கலும் உரிய |
இல.வி.அ.22. - - |
இளம்பூரணர் |
திணைமயக்குறுதலும்.................யோரே. |
இது, மேல் அதிகரிக்கப்பட்ட நிலத்தினானும் காலத்தினானும் ஆகிய திணை மயங்குமாறு உணர்த்துதல் நுதலிற்று. |
(இ-ள்) திணை1 மயங்குறுதலும் கடிநிலை இல - ஒரு திணைக்கு உரிய முதற்பொருள் மற்றோர் திணைக்குரிய முதற்பொருளோடு சேர நிற்றலும் கடியப்படாது, நிலன் ஒருங்கு மயங்குதல் இல் எனமொழிப-ஆண்டு நிலன் சேரநிற்றல் இல்லை என்று சொல்லுவர், புலன் நன்கு உணர்ந்த புலமையோர்-புலன் நன்கு உணர்ந்த புலமையோர். |
1. திணை-முதற்பொருள். |