என் - எனின், மேல் உருபுகள் தொக்குவரும் என்புழித் தொக்கு வருவனவற்றது நிலை ஒவ்வாமை கண்டு அஃது உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) இரண்டாவதன் பொருண்மையும், ழாவதன் பொருண்மையும் அல்லாத பொருள்களிடத்து வருகின்ற உருபுகள் நமக்கு உண்மையாகிய வடிவு தொகா இருமொழியின் இறுதிக்கண், (எ - று.) (எ - டு.) கடந்தான் நிலம், இருந்தான் குன்றத்து எனவரும். வந்தான் சாத்தனொடு என்பது வந்தான் சாத்தன் என உருபு தொக்குழிஅப்பொருள் விளங்காமையின் அந்நிகரன இறுதிக்கண் தொகாவாயின. “நாணிலமன்ற” (35) என்னும் குறுந்தொகையுள் “பிரிந்திசினோர்க்கு அழல்” என ஆனிறுதிக்கண் தொக்குநின்றதால் எனின் அந்நிகரன வழக்கினுள் இன்மையின் செய்யுள் விகாரம் என்க. (22) |