உருபுகள் ஒரோவழித் தம் பொருண்மையின்றி
மயங்குமெனல்
 

108.

யாதன் உருபின் கூறிற் றாயினும்
பொருள்செல் மருங்கின் வேற்றுமை சாரும்.
1

 

என் -  எனின், உருபுகள்  ஒரோவழித்  தம்  பொருண்மையின்றி
மயங்குதலுடைய என்பது உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) ஒருபொருண்மை     யாதானும்    ஓர்   உருபினால்
கூறப்பட்டதாயினும்      அப்பொருண்மை      அவ்வுருபினதாகாது
அப்பொருள்  செல்லும்  கூற்றினையுடைய  வேற்றுமை ஆண்டுவந்து
சார்ந்த அப்பொருளினைக் கொள்ளும், (எ - று.)

(எ - டு.) “கிளியரி  நாணற்  கிழங்குமணற்  கீன்ற,  முளையோ
ரன்ன   முள்ளெயிற்றுத்    துவர்வாய்”    (அகம்  212)   என்னும் 
பாட்டினுள், மணலுள் ஈன்ற என்பது மணற்கீன்ற என்றாயிற்று.

இவ்வாறு       பொருளன்றியும்      மயங்கும்     என்றதால்
வேண்டியவாறெல்லாம்   வரப்பெறும்   என்றவாறாம்  பிற  எனின்,
அதுவன்று; வழக்குள்வழிய தம்முடிபு எனக் கொள்க.
         (23)


1. இந் நூற்பாவினை  நன்னூலார்   அப்படியே    கொண்டெடுது
‘மொழிந்துள்ளார் (நன் - பெயரியல் - 60)

******************************************************************