எதிர்மறைக் கண்ணும் வேற்றுமை தம் பொருள்
திரியா எனல

 

109.

எதிர்மறுத்து மொழியினும் தத்தம் மரபின்
பொருள்நிலை திரியா வேற்றுமைச் சொல்லே.
 

என் - எனின், அவ்வேற்றுமைகள்  தம்  பொருள் மாறுபட நின்ற
வழியும், தம் பொருள் என்பது உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) ஐ  முதலிய  ஐவகை  உருபிற்கும் செயப்படு  பொருள்
முதலாக  ஓதப்பட்ட  பொருண்மைகளை  எதிர் மறைபடச் சொல்லும்
தமக்குரிய     மரபாகிய    அப்பொருள்    நிலைமையில்   திரியா
அவ்வேற்றுமைச் சொற்கள் (எ - று.)

(எ - டு.) மரத்தைக் குறையான், சாத்தனொடு வாரான் எனவரும்,
பிறவும் அன்ன.                                        (24)

******************************************************************