உருபுகளுட் சில செய்யுளுள் திரியுமெனல்
 

110.

கு ஐஆன் என வரூஉம் இறுதி
அவ்வொடும் சிவணும் செய்யு ளுள்ளே.
 

என் -  எனின், அவ்வுருபுகள்  ஒருசாரன  செய்யுளுள்  திரிபுபட
நிற்றலுடைமைகண்டு அஃது உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) கு  என்றும்,  ஐ  என்றும்,  ஆன்  என்றும்  சொல்ல
வருகின்ற  உருபு ஈறுகள் அகரத்தோடு பொருந்தி ஈறுதிரிந்து நிற்றலும்
உடைய,    செய்யுளிடத்து    என்றவாறு,   அவைகளை   முன்னர்ச்
சொல்லுதும்,                                            (25)

******************************************************************