எய்தியது விலக்கல்
 

111.

அவற்றுள்
அஎன்ப பிறத்தல் அஃறிணை மருங்கின்
குவ்வும் ஐயும் இல்லென மொழிப.
 

என் - எனின், எய்தியது விலக்குதல் நுதலிற்று.

(இ - ள்.) அ  என ஈறு திரிந்து நிற்றல், அஃறிணை இடத்துக்கு
என்னும் உருபும், ஐ என்னும் உருபும் நில்லாமையுடைய, (எ - று.)

எனவே     உயர்திணையிடத்து மூன்றுருபும் திரியும் என்பதூஉம்,
அஃறிணைக்கண் ஆன் என்னும் உருபு ஒன்றுமே திரியும் என்பதூஉம்
பெற்றாம்.

(எ - டு.) “கடிநிலை   யின்றே   யாசிரி   யர்க்க”  ஆசிரியர்க்கு
எனற்பாலது  ஆசிரியர்க்க என்றாயிற்று. “காவலோனக் களிறஞ்சும்மே”
-  காவலோனை  எனற்பாலது  காவலோன  என்றாயிற்று.  புலவரான்
என்பது புலவரான என்றாயிற்று. இவை உயர்திணைக்கண் திரிந்தவாறு.
புள்ளினான்     என்பது     புள்ளினான    என்றாயிற்று.    இஃது
அஃறிணைக்கண் திரிந்தவாறு.

அவ்வொடும்   என்ற உம்மை எதிர்மறையாகலான் ஈறு திரியாமல்
நிற்றல்  பெரும்பான்மை.  இவை   இடைச்சொல்லாதலின்
1  ‘தம்மீறு
திரிதல்’   என்புழி   அடங்காதோ   எனின்,  வழக்கினுள்  இவ்வாறு
வாராமையின் அடங்கா என்பது.                           (26)


1. இடையியல் 3 ஆம் நூற்பா.

******************************************************************