இஃது அப் பெயர்களைக் கூறுவல் எனல்
 

122.

அவ்வே,
இவ்வென அறிதற்கு மெய்பெறக் கிளப்ப.
 

என் - எனின், மேற்சொல்லப்பட்டவற்றை இனிச்  சொல்லுப என்பது
உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.)  மேல்   விளி   யேற்பனவும்    ஏலாதனவும்    எனச்
சொல்லப்பட்டவற்றை  இவை   என  அறியும்படி  வழக்குக்குத்  தழுவ
எடுத்தோதுப ஆசிரியர். அதனான் யானும் அம்முடிபே கூறுவல் என்பது.

இது மொழிவாம் என்னும் தந்திரவுத்தி;

மற்றஃதாமாறு  என்னை,  கிளப்பல் என்னாது, கிளப்ப என்றமையின்,
முதனூலுள் அவ்வாறு கூறும் என்பதன்றே பெறுவது எனின், சொற்

கிடையாது  எனினும்  ஆண்டுக்  கூறியவாறு  போல  யானும்  ஈண்டுக்
கூறுவல்  என்பது  கருத்தாகக்  கொள்க.  இனிக் கிளப்ப  என்பதனைப்
பெயர்ப்படுத்துக் கூறலும் ஒன்று.                              (2)

******************************************************************