இகர ஐகார ஈறுகள் விளியேற்குமாறு
 

124.1அவற்றுள்
இஈ யாகும் ஐஆய் ஆகும்.
 

என்  -  எனின்,   மேற்சொல்லப்பட்ட  நான்கனுள்ளும்  இகரவீறும்
ஐகாரவீறும் விளியேற்குமாறு உணர்த்தல் நுதலிற்று.

(எ - டு.)நம்பி - நம்பீ, நங்கை - நங்காய் எனவரும்.

இவை ஈறுதிரிதல்.                                       (4)


1. ‘அவற்றுள்’ என்பது தெய்வச்சிலையார் பாடம்.

******************************************************************