என் - எனின், ஒழிந்த இரண்டு ஈறும் விளி ஏற்குமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) ஓகார ஈற்றுப் பெயரும் உகர ஈற்றுப் பெயரும் ஏகாரத்தோடு பொருந்தி விளியேற்கும், (எ - று.) (எ- டு.) கோ - கோவே எனவும், வேந்து - வேந்தே எனவும் வரும். இவை பிறிது வந்தடைதல். (5)
1. இதனையும் அடுத்த நூற்பாவையும் இணைத்து ஓரே நூற்பாவாகக் கொள்வர் தெய்வச்சிலையார். |