மேற்கூறிய உகரம்குற்றிய லுகரமெனல்
 

126.

உகரந் தானே குற்றிய லுகரம்.
 

என் - எனின்,  ஐயமறுத்தல்  நுதலிற்று ; என்னை 1மேல் இ உ  ஐ
ஓ  என்புழி  இன்ன உகரம் என்று  தெரிந்துக்  கூறாமையானும்,  உடன்
ஓதப்  பட்ட  எழுத்துக்கள்  முற்று   இயல்பினவாதலும், இன்ன  உகரம்
என்பது அறியாது ஐயுற்றான் ஐயந்தீர்த்தமையின் என்பது.

(இ - ள்.) மேற்  கூறப்பட்ட  உகரந்தான்  முற்றி யலுகரம் அன்று ;
குற்றயிலுகரமாம், (எ - று.)                                   (6)


1.விளிமரபு 3 ஆம் நூற்பா.

******************************************************************