என் - எனின், எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தல் நுதலிற்று. மேற்கூறியவாறன்றி இன்னுழி இயல்பாம் என்கின்றமையின். (இ - ள்.) மேற்கூறிய உயிரீறு நான்கினையுமுடைய அணியாரைக் கூவும் சொற்கள் மேற் கூறியவாறன்றி இயல்பாய் விளியேற்கும், (எ-று.) (எ - டு.) நம்பி வாழி, நங்கை வாழி, வேந்து வாழி, கோ வாழி எனவரும். (10) |