உயர்திணையில் விளியேற்கும் புள்ளியீறுகள்
 

131.

னரலள என்னும் அந்நான் கென்ப
புள்ளி இறுதி விளிகொள் பெயரே.
 

என் - எனின்,  உயர்திணைக்கண்  உயிரீறு   விளியேற்பன  இவை
என்பது    உணர்த்தி    இனி   இவ்வுயர்திணைக்கண்   புள்ளி   ஈறு
விளியேற்பன இவை என்பது உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) ன ர ல ள என்று  சொல்லப்பட்ட அந்  நான்கு  ஈற்றுப்
பெயரும்   என்று  சொல்லுப   ஆசிரியன்,  புள்ளியீற்றினை   உடைய
விளித்தலைக்கொள்ளும் உயர்திணைப் பெயராவன, (எ - று.)

புள்ளியீற்றுள் இவை  கொள்ளும்  எனவே  ஒழிந்தன விளிகொள்ளா
என்பதூஉம் பெற்றாம்.

(எ - டு.) பொருந,  பாண   எனவும்  எல்லாரும்  எனவும்  இவை
முதலாயின விளி ஏலாதன எனக்கொள்க.                       (11)

******************************************************************