னகர ஈறு அண்மை விளியில் அகரமாதல்
 

134.

அண்மைச் சொல்லிற் ககரம் ஆகும்.
 

என் - எனின், எய்தியது விலக்கிப் பிறிது விதிவகுத்தல் நுதலிற்று.

(இ - ள்.) அவற்றுள்   அன்    ஈறு    அணியாரை   விளிக்குஞ்
சொல்லிடத்து அகரமாகும், (எ - று.)

(எ - டு.) சோழன் - சோழ, சேர்ப்பன் - சேர்ப்ப எனவரும்.   (14)

******************************************************************