ஆனென் இறுதி விளி யேற்குமாறு
 

135.

ஆனென் இறுதி இயற்கை யாகும்
 

என் - எனின், னகர ஈற்றுள் ஒருசாரன விளி ஏற்குமாறு நுதலிற்று.

(இ - ள்.) ஆன்   என்னும்   னகர   இறுதிப்  பெயர்  இயல்பாய்
விளியேற்கும், (எ - று.)

(எ - டு.) சேரமான், மலையமான் எனவரும்.                (15)

******************************************************************