எய்தியது விலக்கிப் பிறிது விதி வருத்தல்
 

136.

தொழிலிற் கூறும் ஆனென் இறுதி
ஆயா கும்மே விளிவயி னான.
 

என் - எனின், எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தல் நுதலிற்று.

(இ - ள்.) ஒருவன்  செய்யும்  தொழில்  ஏதுவாகக்   கூறப்படுகின்ற
ஆன் என்னிறுதிப்பெயர் விளியேற்கு மிடத்து ஆயாகும், (எ - று.)

(எ - டு.)உண்டான் - உண்டாய். நின்றான் - நின்றாய்  எனவரும்.
                                                  (16)

******************************************************************