என் - எனின், இஃது, எய்தியதன் மேல் சிறப்புவிதி வகுத்தல் நுதலிற்று. (இ - ள்.) மேற்கூறிய இரண்டு ஈறும் தொழிற் பெயர்க்கு ஈறாய்வரின் மேற்கூறிய ஈரோடு ஏகாரம் பெற்று வருதலும் குற்றமின்று என்று சொல்லுவார் *விளங்கிய அறிவினையுடையார், (எ - று.) (எ - டு.) உண்டார் - உண்டீரே, தின்றார் - தின்றீரே எனவரும். அர் ஈறு வந்தவழிக் கண்டு கொள்க. வழுக்கின்று என்றதனால், தொழிற்பெயரல்லனவும் ஈரொடு ஏகாரம் பெறுதல் கொள்க. (எ - டு.) நம்பீரே, கணியீரே எனவரும். (22) |