இதுவுமது
143.
என் - எனின், இதுவும் எய்தியதன்மேல் சிறப்பு விதி வகுத்தல்நுதலிற்று.
(இ - ள்.) அவ்விரண்டு ஈற்றுப் பண்புகொள் பெயரும்அத்தொழிற்பெயரோடு ஒரு தன்மைத்து, (எ - று.)
(எ - டு.) கரியீரே ; செய்யீரே எனவரும். ஈண்டும் ஆர்ஈறுவந்தவழிக் கண்டுகொள்க. (23)