எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தல்
 

148.

அயல்நெடி தாயின் இயற்கை யாகும்.
 

என் - எனின், எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தல் நுதலிற்று.

(இ -  ள்.) அவ்விரண்டு  ஈற்றுப்பெயரும்  ஈற்றயலெழுத்து  நீண்ட
நிலைமையவாயின் இயல்பாய் விளியேற்கும், (எ - று.)

(எ - டு.) ஆண்பால், பெண்பால், ஏமாள், கோமாள் எனவரும். (28)

******************************************************************