என் - எனின், அவ்விரண்டீற்றுள் ளகார ஈற்றிற்கு எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தல் நுதலிற்று. (இ- ள்.) வினையினானும், பண்பினானும் ஆராயத் தோன்றும் ஆள் என்னும் இறுதி விளிக்குமிடத்து ஆயாய் விளியேற்கும், (எ -று.) (எ - டு.) உண்டாள் - உண்டாய் எனவும், கரியாள் - கரியாள் எனவும் வரும். (29) |