இதுவுமது
 

150.

முறைபெயர்க் கிளவி முறைப்பெய ரியல.

என் - எனின்,  இதுவும்  எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தல்
நுதலிற்று.

(இ - ள்.) ளகார   ஈற்றுப்பெயர் னகாரஈற்று  முறைப்பெயர் போல
1ஏகாரம் பெற்று விளியேற்கும், (எ - று.)

(எ - டு.) மகள் - மகளே; மருமகள் - மருமகளே என வரும்.

மற்று  இதுவும்   விரவுப்பெயரன்றே   எனின்   2மேற்கூறியவாறே
கொள்க.                                                (30)


1. 139 ஆம் நூற்பா. 2. 129 ஆம் நூற்பா உரை.

******************************************************************