ளகார ஈற்றுள் விளி ஏலாதன
 

151.சுட்டுமுதற் பெயரும் வினாவின் பெயரும்
முற்கிளந் தன்ன என்மனார் புலவர்.
 

என் -  எனின்,  இஃது  ளகார ஈற்றுள் விளியேலாதன உணர்த்துதல்
நுதலிற்று.

(இ - ள்.) ளகார  வீற்றுச் சுட்டெழுத்தினை முதலாகவுடைய அவள்,
இவள்,  உவள்   என்னும்   பெயர்களும்,   வினாப்பொருண்மையுடைய
யாவள் என்றும்  பெயரும்,  னகார ஈற்றுச்  சுட்டெழுத்து முதற்பெயரும்
வினாவின்  பெயரும்  போல   விளியேலா  என்று  சொல்லுவர் புலவர்
(எ - று.)                                                (31)

******************************************************************