அம்மா என்னும் சொல் விளி ஏற்குமாறு
 

156.

அம்ம என்னும் அசைச்சொல் நீட்டம்
அம்முறைப் பெயரொடு சிவணா தாயினும்
விளியொடு கொள்ப தெளியு மோரே.
 

என் -  எனின்,  இதுவும்  விளித்திறத்தொடு படுவதோர் இலக்கணம்
உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) அம்ம   என்று    சொல்லப்படுகின்ற    அகர   வீற்று
அசைச்சொல்    ஆகாரமாகி    நீண்டு    நிற்றல்    அவ்விளியேற்கு
முறைமையையுடைய    பெயர்களோடு    பொருந்தாதாயினும்   பெயர்
விளிகளோடு   இதனையும்   ஓர்    விளிநிலைமைத்தாகக்   கொள்வர்
தெளிந்த அறிவினையுடையார், (எ - று.)

(எ - டு.) அம்மா கொற்றா எனவரும்.                     (36)

******************************************************************