சொல் இருவகையால் பொருளுணர்த்தும் எனல்
 

160.தெரிபுவேறு நிலையலும் குறிப்பிற் றோன்றலும்
இருபாற் றென்ப பொருண்மை நிலையே.
 

என் - எனின், இதற்கும் அக்கருத்து ஒக்கும்.

(இ - ள்.) இச்  சொல்லினது  பொருள்  இது எனத் தெரிந்து வேறு
நிற்றலும், அவ்வாறன்றிச்  சொல்லுவான்  குறிப்பி
னான்  இச்சொல்லினது
பொருள்   இது  என   அறிய  நிற்றலும்  என  இருபகுதித்து  என்று
சொல்லுவர் ஆசிரியர், (எ - று.)

(எ - டு.) இடா, திடா என்பன தெரிபு வேறுநிலையல்,  சோறுண்ணா
நின்றான், கற்கறித்து நன்கு அட்டாய் என்றல் குறிப்பிற்றோன்றல்.    (3)

******************************************************************