என் - எனின், மேற் பொருளுணர்ந்து மெனப்பட்ட சொல்லிற்குப் பெயரும் முறையும் தொகையும் உணர்த்தல் நுதலிற்று. (இ - ள்.) சொல்லென்று சிறப்பித்துச் சொல்லப்படுவன பெயர்ச்சொல்லென்றும். வினைச்சொல் லென்றும் அவை யிரண்டு மென்று சொல்லுப இலக்கணம் அறிந்த ஆசிரியர், (எ - று.) பெயர்ச்சொல் பொருளை உணர்த்துதலின் முற் கூறப்பட்டது. வினைபொருளது புடைபெயர்ச்சியாகிய தொழிலினை உணர்த்தலின் சிறப்பினவல்ல என்று பிற்கூறப்பட்டது. என சிறப்பின்கண் வந்தது. (4)
1.‘சொல்லெனப்படுவ’ என்பதும் பாடம். |