என் - எனின், நிறுத்த முறையானே பெயர்ச் சொற்களது பெயரும் முறையும் தொகையும் உணர்த்தல் நுதலிற்று. (இ - ள்.) மேற் சொல்லப்பட்ட நான்கு சொல்லுள்ளும் பெயர்ச்சொல்லென்று சொல்லப்படுவனவற்றை ஆராயுங்காலத்து உயர்திணைக்கு உரிமையும், அவ்விரு திணைக்கும் ஒத்த உரிமையுடையனவும் என அம்மூன்று கூற்றன அவை தோன்று நெறிக்கண், (எ - று.) அப்பெயர் பெயர் ; அம்முறைமுறை ; அத்தொகை தொகை என உணர்க. (6)
1.‘அம்மூவுருவின’ என்பது நச்சினார்க்கினியர் பாடம். |