இதுவுமது
 

164.இருதிணைப் பிரிந்த ஐம்பாற் கிளவிக்கும்
உரியவை உரிய பெயர்வயி னான.
 

என் -  எனின்,  இதுவும்  பெயர்க்கண்ணே கிடந்ததோர் இலக்கணம்
உணர்த்தல் நுதலிற்று.

(இ - ள்.)  இருதிணையினின்றும்  பிரிந்த    ஐம்பாற்  பொருட்கும்
ஒருபாற்குரிய   தொழில்கள்   ஏனைப்பாற்கும்  உரியவாம்.   இவ்வாறு
உரியவாவது  எச்சொல்லிடத்தோ  எனின்,   வினைச்சொல்லிடத்தாகாது
பெயர்ச் சொல்லிடத்தேயாம் (எ - று.)

நஞ்சுண்டான்   சாம்,   நஞ்சண்டாள்  சாம்,   நஞ்சுண்டார்  சாவர்,
நஞ்சுண்டது      சாம்,     நஞ்சண்டன    சாம்    என்பது.   மற்று
அவ்வாண்பான்மேற்   கூறற்குரிய   சாதலென்னும்வினை மற்றை நான்கு
பாற்கண்ணும்  தனித்தனி  கூறாமல்  சென்றதென  உணர்க.  உண்டான்
என்பதனைப் படுத்தலோசையாற் பெயராக்கிக் கொள்க.

பார்ப்பான்   கள்ளுண்ணான்    என்பது   கள்ளுண்டல்   அதற்கு
இன்மையின் அஃறிணைப்பான்மேற் செல்லாதாயிற்று.

******************************************************************