என் - எனின், நிறுத்த முறையானே உயர்திணைப் பெயர் உணர்ந்துதல் நுதலிற்று. (இ - ள்.) அவ்வாறு மூன்று கூற்றவாய் நின்ற பெயர்களிடத்து அவன் என்பது முதலாக உவர்என்பது ஈறாக ஓதப்பட்ட சுட்டுப்பெயர் மும்மூன்று என்பதும், யான் என்னுந் தனித்தன்மைப் பெயர் ஒன்றும், யாம் என்னும் படர்க்கையுளப்பாட்டுத் தன்மைப் பெயர் ஒன்றும், நாம் என்னும் முன்னிலை யுளப்பாட்டுத் தன்மைப்பெயர் ஒன்றும், யாவன் யாவர் யாவள் என்று சொல்லப் படுகின்ற அவ்வினாவிடத்துப் பெயர் மூன்றுமாகப் பதினைந்தும் ஒருவன் ஒருத்தி எனப் பாலறிய வந்த உயர்திணைப் பெயராம் (எ - று.) (8) |