இதுவுமது
 

168.நிலைப்பெயர் குடிப்பெயர் குழுவின் பெயரே
வினைப்பெயர் உடைப்பெயர் பண்புகொள்பெயரே
பல்லோர்க் குறித்த முறைநிலைப் பெயரே
பல்லோர்க் குறித்த சினைநிலைப் பெயரே
பல்லோர்க் குறித்த திணைநிலைப் பெயரே
கூடிவரு வழக்கின் ஆடியற் பெயரே
இன்றிவர் என்னும் எண்ணியற் பெயரே
டன்றி அனைத்தும் அவற்றியல் பினவே.
 

என்   -   எனின்,   இது   உயர்திணையொருசார்ப்   பெயர்களை
உணர்த்தல் நுதலிற்று.

(இ - ள்.)  அருவாளன்  சோழியன்  என்றாற்போல ஒருவன் தான்
பிறந்த  நிலத்தினாற்   பெற்ற   பெயர்களும்,  மலையமான்  சேரமான்
பார்ப்பான்  அரசன் என்றாற்போல அவன்  தான் பிறந்தகுடியாற்பெற்ற
பெயர்களும்,   அவையத்தார்    அத்திகோசத்தார்  வணிககிராமத்தார்
என்றாற்போலத்     தாம்    திரண்ட   திரண்ட  திரட்சியினாற்பெற்ற
பெயர்களும்,    உண்டார்    என்றாற்போல    அவன்தான்  செய்யும்
தொழிலாற்  பெற்ற   பெயர்களும், அம்பர்  கிழாஅன் அம்பருடையான்
எனறாற்  போல  அவன்  தனது  உடைமையாற்  பெற்ற
பெயர்களும், கரியான்    செய்யான்    என்றாற்போலத்      தனது   பண்பினால்
பெற்ற  பெயர்களும், தந்தையார் தாயர் என்றாற்போலப்  பல்லோரைக்
கருதின   தமது   முறையால்    பெற்ற   பெயர்களும்,  பெருங்காலர்
பெருந்தோளர் பெருங்கண்ணீர்  என்றாற்போலப் பல்லோரைக் கருதின
தமது  சினை  நிலைமையாந்  பெற்ற   பெயர்களும்,   குறவர் ஆயர்
வேட்டுவர்  என்றாற்போலப்  பல்லோரைக்  கருதின  குறிஞ்சி முதலிய
திணைகளாற்  பெற்ற பெயர்களும், இளந்துணைமகார் தம்மிற் கூடிவரும்
வழக்கின்கண்  அவர்  தமது  விளையாட்டுவகையான்  தாமே  தமக்கு
அப்போதைக்குப்    பட்டிபுத்திரர்    கங்கைமாத்திரர் என்றாற்போலப்
படைத்திட்டுக்கொண்ட பெயர்களும், ஒருவர் இருவர்  மூவர்   நால்வர்
என்றாற்போல  இத்துணையர்  எனத் தமது  வரையறையுணர   நிற்கும்
எண்ணியல்பினாற்  பெற்ற  பெயர்களும் மேற்கூறிய பெயர்கள் போலப்
பாலறியவந்த   உயர்திணைப் பெயராம்,(எ - று.)               (11)

******************************************************************