என் - எனில், இதுவும் உயர்திணைப் பெயருக்குப் புறனடை யுணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) மேற்கூறிய அத்தன்மை பிறவுமாயுள்ள உயர் திணையிடத்துப் பன்மையும் ஒருமையுமாகிய பால்களை அறியவந்த எல்லாப் பெயர்களும் அவ் வுயர்திணைக்குரிய பெயர்களாம், (எ - று.) (எ - டு.)ஏனாதி, வாயிலான், வண்ணத்தான், சுண்ணத்தான், பிறன், பிறள், பிறர், தமன், தமள், தமர், நுமன், நுமள், நுமர், மற்றையான், மற்றையாள், மற்றையார் எனவரும். பிறவும் அன்ன. (12) |