என் - எனின் செப்பு வழுவமைதி கூறுதல் நுதலிற்று. (இ - ள்.) வினாவென்று சொல்லப்படுகின்றதும் ஒரோவழிச் செப்பென்று சொல்லப்படும்; ஒருவன் ஒன்றனை வினாவத் தானும் அதற்கு எதிர் ஒன்றனை வினவி இறைப்பொருள் படுத்துமே யெனின் (எ - று.) (எ - டு.) சாத்தா சோறு உண்ணாயோ? என்றாற்கு உண்ணேனோ? இது வினா வழுவமைதியன்றோ எனின்? பிறிதோர் வினாவந்து வினாப் பொருள் பயவாது செப்புப்பொருள் பயப்பநிற்றலின், செப்பு வழுவமைதியென அடக்கினார். (14) |