என் - எனின், இதுவும் பாலறிய வரும் அஃறிணை யொருசார்ப்பெயர்களையுணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) கள் என்னும் வாய்பாட்டோடு பொருந்தும் அவ்வஃறிணையியற் பெயர்கள் பலவறி சொல்லாதற்குக் கொள்ளும் இடமுடைய, (எ - று.) கள்ளொடு சிவணின் இயற்பெயர் பலவறி சொல்லாகக் கொள்ளுமிட முடைய எனவே, கள்ளொடு சிவணாத பெயர்கள் பலவறி சொல்லாகக் கொள்ளப்படாத ; ஒருமைக்கும் பன்மைக்கும் பொதுவாய் நிற்கும் என்றவாறு. (எ - டு.) நாய்கள், ஆக்கள் எனப் பன்மை யுணர நின்றன ; நாய் ஆ எனக் கள்ளொடு சிவணாமையிற் பொதுவாய் நின்றன எனக் கொள்க. (15) |