அஃறிணை இயற்பெயர் பாலுணருமாறு
 

174.தெரிநிலை யுடைய அஃறிணை இயற்பெயர்
ஒருமையும் பன்மையும் வினையொடு வரினே.
 

என் - எனின்,  மேற் புறனடையுள்  பால் அறிய  வருவனவற்றோடு
ஒன்றாக  ஓதப்பட்ட  இயற்பெயர்கள்  பாலறிய   வருமாறு  உணர்த்தல்
நுதலிற்று.

(இ - ள்.) அஃறிணையிடத்து ஒருமையும்  பன்மையுமாகிய  பால்கள்
எப்பொழுது     தெரிவதெனின்    பால்    காட்டும்     வினையொடு
வரும்பொழுது, (எ - று.)

(எ -  டு.) ஆ  வந்தது,  ஆ வந்தன எனவும் வினையால் பாலறிய
வந்தவாறு கண்டுகொள்க.                                    (17)

******************************************************************