என் - எனின், நிறுத்த முறையானே விரபுப் பெயராமாறு உணர்த்தல் நுதலிற்று. (இ - ள்.) இருதிணைப் பொருட்கும் ஒன்று போன்ற உரிமை காரணமாக அவ்வத்திணைக்கண் செலவு வரவுடைத்தாய் உயர்திணைக்கண் சென்றகாலத்து உயர்திணைப் பெயராயும் அஃறிணைக்கண் சென்ற காலத்து அஃறிணைப்பெயராயும் வேறுபடுகின்ற விரவுப் பெயர்களெல்லாம் ஆராயுங் காலத்து அவ்வத் திணையே யுணர்த்துதற்குரிய முறைமையினையுடைய வினைச் சொற்களான் அல்லது, திணைதெரிதல் இல, (எ - று.) (எ - டு.)சாத்தன் வந்தான், சாத்தன் வந்தது எனவரும். வினையானேயன்றித் தத்தம் மரபிற் பெயராலும் திணையறியப்படும் என்பது. (எ - டு.)சாத்தன் ஒருவன், சாத்தன் ஒன்று என வரும் இன்னும் அவ்விலேசானே 1மேற்கூறிய அஃறிணையுடைய பெயர்களும், வினையானே யன்றிப் பெயரானும் பால் அறியப்படுமெனக் கொள்க. ஆ ஒன்று, ஆ பல எனவரும். (18)
1.172 ஆம் நூற்பா. |