விரவுப் பெயரின் விரி
 

178.

அவற்றுள்,
நான்கே இயற்பெயர் நான்கே சினைப்பெயர்
நான்கென மொழிமனார் சினைமுதற் பெயரே

முறைப்பெயர்க் கிளவி இரண்டா கும்மே
ஏனைப் பெயரே தத்தம் மரபின.
 

என் - எனின்,    மேல்    தொகுத்தோதின   விரவுப் பெயர்களை
விரித்தோதுதல் நுதலிற்று. 
  

(இ - ள்.) மேல்  ஓதப்பட்டவற்றுள் இயற்பெயரெனப்பட்டது நான்கு
வகைப்படும்.   சினைப்பெயர்    எனப்பட்டது   நான்கு   வகைப்படும்.
சினைமுதற்   பெயரினையும்   நான்கு   வகைப்படும்  என்று  கூறுவர்
ஆசிரியர். முறைப் பெயர்க்   கிளவி எனப்பட்டது இரண்டு வகைப்படும்.
இவ்வாறு       இவை        வகைப்பட்டமையின்       ஏனையவும்
அவ்வகைப்படுங்கொல்  என்று   ஐயுறின்,  அவ்வகைப்  படாது ஒழிந்த
பெயர்கள்  ஐந்தும்   அவ்வோதிய  வாய்பாடேயாகும் மரபினையுடைய,
(எ - று.)
  

மேல் தொகையான்   ஒன்பது  எனப்பட்ட  விரவுப்பெயர்  இவ்விரி
நிலையால் பத்தொன்பதாயின எனக் கொள்க.                  (21)
  

******************************************************************