இயற்பெயர் நான்கு எனல்
 
  

179.

அவைதாம்,
பெண்மை இயற்பெயர் ஆண்மை இயற்பெயர்
பன்மை இயற்பெயர் ஒருமை இயற்பெயரென்
றந்தான் கென்ப இயற்பெயர் நிலையே.
 

என் - எனின்,  மேல்  இயற்பெயர்  நான்கு என்றமையின் அவற்றது
பெயரும் முறையும் உணர்த்தல் நுதலிற்று.
  

(இ - ள்.) அவ்வாறு  வகுக்கப்பட்டனதாம் யாவை எனின் பெண்மை
இயற்பெயரும்,   ஆண்மை    இயற்பெயரும்,  பன்மை   இயற்பெயரும்,
ஒருமை  இயற்பெயரும்   என்று  சொல்லப்  பட்ட அந்நான்கும் என்ப
இயற்பெயரது  நிலைமையை,  (எ - று.)
                      (22)  

******************************************************************