தாம் என்னும் விரவுப்பெயர்
 
  

187.

தாமென் கிளவி பன்மைக் குரித்தே.
 

என் - எனின்,  தாம்  என்பது   திணைக்குரித்தாமாறு  உணர்த்தல்
நுதலிற்று.
  

(இ - ள்.) தாம் என்பது இருதிணைப் பன்மைக்கும் உரித்து, (எ - று.)

(எ - டு.) தாம் வந்தார், தாம் வந்தன எனவரும்.  

வாளாது    பன்மை     என்றமையின்     ஆண்     பன்மையும்
பெண்பன்மையும் எனக் கொள்க.                            (30)

******************************************************************