தான் என்னும் விரவுப்பெயர்
 
  

188.

தானென் கிளவி ஒருமைக் குரித்தே
 

என் - எனின்,   தான்   என்னும்   சொல்   திணைக்குரித்தாமாறு
உணர்த்தல் நுதலிற்று.
  

(இ - ள்.) தான் என்னும்  சொல்  இருதிணை ஒருமைக்கும் உரித்து,
(எ - று.)
  

(எ - டு.)  தான் வந்தது, தான் வந்தான், தான் வந்தாள் எனவரும். 

வாளாதே ஒருமை  என்றமையின்  பெண்பால்  மேலும்,  ஆண்பால்
மேலும் கொள்க.                                         (31)
  

******************************************************************