எல்லாம் என்னும் விரவுப்பெயர்
 

189.

1எல்லாம் என்னும் பெயர் நிலைக் கிளவி
பல்வழி நுதலிய நிலைத்தா கும்மே.
 

என் - எனின்,   எல்லாம்   என்னும்  சொல்  திணைக்குரித்தாமாறு
உணர்த்தல் நுதலிற்று.

(இ - ள்.)   எல்லாம்    என்று     சொல்லப்படும்    பெயராகிய
நிலைமையையுடைய சொல்  இருதிணைப்  பன்மையிடத்தையும்  கருதிய
நிலைமைத்தாகும்,  (எ - று.)

(இ - ள்.) எல்லாம்  வந்தார்,  எல்லாம்  வந்தீர்,  எல்லாம் வந்தன,
எல்லாம் வந்தேம் எனவரும்.

வாளா  பன்மை  என்றமையின்  இரண்டிடத்தும்  ஆண் பன்மையும்
பெண் பன்மையும் கொள்க.                                 (32)


1. இதனையும் அடுத்த  நூற்பாவையும் இணைத்து ஒரே நூற்பாவாகக்
கொள்வர் தெய்வச்சிலையார்.

******************************************************************