மேலதற்கு எய்தியது ஒருமருங்கு மறுத்தல்
 

190.

தன்னுள் ளுறுத்த பன்மைக் கல்லது
உயர்திணை மருங்கின் ஆக்கம் இல்லை.

என் - எனின், எய்தியது ஒரு மருங்கு மறுத்தல் நுதலிற்று.
 

(இ - ள்.)   மூன்றிடத்தும்    இருதிணைமேலும்    சென்றமையின்
தன்மையிடத்து   அஃறிணைக்கண்   ஆகாது  என்றமையான், எல்லாம்
என்னும்   சொல்    சொல்லுவான்   தன்னை   உள்ளுறுத்து   அஃது
அஃறிணை  மொழி   கூறாமையின் அஃறிணைத்  தன்மைப் பன்மைக்கு
உயர்திணை யிடத்தல்லது அஃறிணையிடத்து ஆகுதல் இல்லை,(எ- று.)

உயர்திணை மருங்கின் அல்லது என மொழி மாற்றிக் கொள்க.

(எ - டு.)எல்லாம் உண்டும் என்பது

மற்று  இஃது அஃறிணை மொழி கூறாமையின்  அஃறிணைத் தன்மை
இல்லை   என்பது  பெறுதுமாகலின் இது கூறல் வேண்டா எனின், மேல்
“பல்வழி   நுதலிய   நிலைத்தாகும்”  என அதற்கு விதி சென்றமையின்
அது விலக்கல் வேண்டும் என்பது.

மற்று  எல்லாம்  உண்டும்  என்ற தன்மைக்கண் வருகின்ற வரவினை
உயர்திணைப்  பெயராக  வேறோதற்பாற்று  எனின், எல்லாம்   என்பது

போல   உயர்திணைக்கே    உரித்தானது    முன்னிலைக்   கண்ணும்
படர்க்கைக்     கண்ணும்     விரவா    நிற்றலின்     ஈண்டேயோத
இன்னுழிவரவின்றி உயர்திணைப் பெயராம், (எ - று.) 
           (33)

******************************************************************