நீ என்பது ஒருமைக்குரித்தாதல்
 

192.

1அவற்றுள்,
நீஎன் கிளவி ஒருமைக் குரித்தே.
 

என் - எனின்,  நீ  என்னும்  சொல்  பாற்குரித்தாமாறு  உணர்த்தல்
நுதலிற்று.
  

(இ - ள்.)  இவ்விரண்டனுள்ளும்  நீ  என்னும்  சொல்  இருதிணை
முன்னிலை ஒருமைக்குரித்தாம், (எ - று.)
  

(எ - டு.) நீ வந்தாய் என வரும்.  

இது இருபாற்கும் உரித்தாயவாறு கண்டுகொள்க. அஃறிணைக்கண்ணும்
பெண்  ஒருமைக்கண்ணும்  ஆண் ஒருமைக்கண்ணும் கொள்க,    (35)


1. இதனையும் அடுத்த  நூற்பாவையும் இணைத்து ஓரே நூற்பாவாகக்
கொள்வார் தெய்வச்சிலையார்.
  

******************************************************************