என் - எனின், நீயிர் என்னும் சொல் இருதிணைப் பன்மைக்கும் உரித்தமாறு உணர்த்தல் நுதலிற்று. (இ - ள்.) எஞ்சிநின்ற நீயிர் என்னும் சொல், இருதிணைப் பன்மைக்கும் உரித்தாம், (எ - று.) (இ - ள்.) நீயிர் வந்தீர் என உயர்திணைப்பலர்மேலும் அஃறிணைப் பலவற்றின் மேலும் வந்தவாறு கண்டு கொள்க. ஈண்டும் அஃறிணைப் பெண்பன்மையினையும் ஆண்பன்மையினையும் உயர்திணைப் பெண்பன்மையினையும் ஆண்பன்மையினையும் கொள்க,,,,,,,,பெயர் ஆராய்ச்சி யெனக் கொள்க. (36) |