உயர்தினை அதிகாரத்து ஒழிபு
ஒருவர் என்பது உயரிருபாற்கும் பொது எனல்
 
   

194.

ஒருவர் என்னும் பெயர் நிலைக் கிளவி
இருபாற்கும் உரித்தே தெரியுங் காலை.
 

என் - எனின்,   உயர்திணை  அதிகாரத்தின்   ஒழிபு  உணர்த்தல்
நுதலிற்று.
  

(இ - ள்.)  ஒருவர் என்று  சொல்லப்படுகின்ற பெயர்நிலை யுடைய
சொல்   உயர்திணை    ஆண்பாலும்   பெண்பாலுமாகிய  இருபாற்கும்
உரிமையையுடைத்து  ஆராயுங்காலத்து,  (எ - று.)
  

(எ - டு.)  ஒருவர்  வந்தார்   என்றால்  இருபாற்கும்  உரித்தெனக்
கொள்க.
  

இருபாற்கும்   உரித்து  என்பது  ஒரு  சொல்லதன்   கண்ணேயோ
எனின், ஒன்று  சொல்லுதற்கண்ணே எனக்  கொள்க. மற்று  இருவரைக்
கூறும்  பன்மைக்கிளவி  எனவும்  பிறவும்  இருபாலினையும் ஒருகாலே
தழுவியும்  வருமால்  எனின்,  ஆண்டுச்  சொல்லிற்படுவது  ஒருபாலே;
மற்றைப்பால்................பாற்    பெறப்படுகின்றது   எனக்கொள்க.   மற்று
இருபாலென்றால்  பன்மை  ஒழிந்த   இருபாலும்  என்பது  யாங்ஙனம்
பெறுதும்  எனின், ஒருவர்  என நின்ற ஒருமை வாய்பாட்டால் பன்மை
நீங்கிற்று எனக் கொள்க.
  

பாலதிகாரத்தே    சொல்லாது ஈண்டுச் சொல்லியது என்னை எனின்,
ஒருபாற் குரித்தாகாது விரவி வருகின்ற நீரிமையால்  ஈண்டுப்  போந்தது
எனக்கொள்க.                                            (37)

******************************************************************