மேலதற்கு முடிபு
 
  

195.

தன்மை சுட்டில் பன்மைக் கேற்கும்.

என் - எனின்,  இஃது  ஒருவர்  என்னும்  சொற்கு முடிபு  கூறுதல்
நுதலிற்று.
  

(இ - ள்.)  முதற்கூறிய   ஒருவர்  என்னும்   சொல்லினது  சொல்
முடியுந்தன்மையைக் கருதில்  தான்  காட்டுகின்ற பொருண்மைக்கு ஏற்ப
ஒருமைச்  சொல்லொடு  முடியாது  ஒருவர் என  ரகர  ஈற்றதாய் நின்ற
அச்சொல்  தன்மைக்கு  ஏற்பப்  பன்மைச்சொல்   கொண்டு   முடியும்,
(எ - று.)
  

(எ - டு.)  ஒருவர் வந்தார் எனவரும்.  

இதுவும் ஓர் பால்பற்றிய மரபு வழுவமைதி எனக் கொள்க.     (38)

******************************************************************