என் - எனின், இவ்வொருவர் என்னும் சொற்கும், மேற்கூறிய நியீர் நீ என்னுஞ் சொற்கட்கும் எய்திய தோர் இலக்கணம் உணர்த்தல் நுதலிற்று. (இ - ள்.) நீயிர், நீ என்னும் இவை இரண்டும், உயர்திணைக்குரித்து, அஃறிணைக் குரித்தென்றும், ஒருவர் என்பது ஆண்பாற்குரித்து, பெண்பாற் கு ரித்து என்றும் பால் தெரிய நில்லாமையின் அவை ஈண்டு இன்ன பெயர் என்பது அறியல் வேண்டின் அச் சொற்களைக் கூறுவான் கருத்தினை அச்சொற்களோடு சேர்த்தி நீயிர், நீ எனவும், ஒருவர் எனவும் மேலோதிய முறையானே திணையும் பாலும் உணர்ந்துகொள்க, (எ - று.) விலங்கு வருதற்பாலதல்லதோர் வழியிருந்து நீயிர் வந்தீர் என்றாலும், நீ வந்தாய என்றானும் கூறின், ஈண்டு உயர்திணை எனவும், இனி, மக்களில்வழி யிருந்து அவை கூறின் அஃறிணை எனவும், இனிக் காட்டுக் கண் புகுதல் போகாநின்றுழி ஒருவர் புகுந்தார் எனில் ஆண்பாலெனவும் ஆண்மக்கள் புகுதற்பாலதல்வழி ஒருவர் இருந்தார் எனில் பெண்பால் எனவும், இடமும் காலமுமாகிய முன்னத்தான் உணர்ந்தவாறு கண்டு கொள்க. மற்று, இஃது அதிகாரந்தான் ஒருவர் என்னும் சொற்கே கூறியதன்றோ நீயிர் நீ என்பதனையும் உடன்கூட்டி யுரைத்தவாறு என்னை எனின், பன்மை கூறிய அதனானும் ஏற்புழிக் கோடல் என்பதனானும் இம் மூன்றற்குங் கொள்ளப்பட்டது. (39) |