பெண்மகன் என்னும் சொற்குமுடிபு கூறல்
 
  

197.

மகடூஉ மருங்கில் 1பால்திரி கிளவி
மகடூஉ இயற்கை தொழில்வயி னான.
 

என் - எனின்,    இதுவும்    உயர்திணையொழிபு    உணர்த்துதல்
நுதலிற்று.
  

(இ - ள்.)  பெண்பாற்குரிய  ஈற்றதாய்  நில்லாப்  பெண்மகனெனப்
பெண்பால்  ஆண்பாலாகத்  திரிந்து   நின்ற  சொல்சொற்கு  முடிபாக
அதன்    தொழில்    கூறுமிடத்து   அப்பெண்பாற்  பொருண்மையின்
இயல்பிற்று, (எ - று.)
  

(எ - டு.) பெண்மகள் வந்தாள் எனவரும்.  

இதுவும்  ஓர்  மரபு  வழுவமைதி  எனக்  கொள்க.  இதுவும்   அந்
நீர்மைத்தாகலின் ஈண்டுப் போந்தது எனக்கொள்க.              (40)


1. ‘பால் தெரி’ என்பதும் பாடம்.

******************************************************************