எய்தியது விலக்கல்
 
  

200.

திணையொடு பழகிய பெயரலங் கடையே.
 

என் - எனின், எய்தியது விலக்குதல் நுதலிற்று,  

(இ - ள்.)   செய்யுளுள்    உயர்திணை    யுணர்த்தாது   நிற்பது
இவ்வைந்திணையோடும்   அடிப்பட்டு  அவ்வைந்திணை உடையானாது
உடைமைக்   கிழமை   உணர்த்தி  நிற்கும்  பெயர் அல்லாத இடத்துக்
கண்ணே;  ஆண்டாயின்  உயர்திணையை  உணர்த்தும்,  (எ - று.)
  

கழனி   ஊரன்   என்பது   போல்வன   செய்யுட்கண்  இறைச்சிப்
பொருட்டாய் வந்தும் உயர்திணையை நோக்கியவாறு கண்டு கொள்க.
  

மேல்     உயர்திணை  சுட்டா  என்றது விரவுப் பெயர்க்கு அன்றே
இவை உயர்திணைப்  பெயர்  ஆயினமையின் எய்தியது வில,,,,,,,,,திணை
சுட்டா  என்று  ஒழிவதன்றி நிலத்துவழி  மருங்கிற் றோன்றலான என்று
காரணம்  கூறினமையின்   உயிர்திணை  பெயரானவற்றிற்கும்  இவ்விதி
எய்தும்   கொல்லோ   என்று   மாணாக்கள்  ஐயுறுவானாயினு...........று
போலும்.
                                               (43)  

ஐந்தாவது பெயரியல் முற்றிற்று.

******************************************************************