உயர்திணைத் தன்மைப்பன்மை வினைமுற்று
  

205.1அவைதாம்,
அம் ஆம் எம்ஏம் என்னும் கிளவியும்
உம்மொடு வரூஉம் கடதற என்னும்
அந்நாற் கிளவியொ டாயெண் கிளவியும்
பன்மை யுரைக்கும் தன்மைச் சொல்லே.
 

என் - எனின்,    மேல்    நிறுத்த    முறையானே   உயர்திணை
யுணர்த்துதல் நுதலிற்று.
  

உயர்திணை    வினைதாம், தெரிநிலை வினையும் குறிப்பு வினையும்
என   இருவகைய;  அவற்றுள்,  தெரிநிலை  வினை   முன்னுணர்த்திய
வெடுத்துக்   கொண்டார்.  அதுதானும்  தன்மை  வினையும்  படர்க்கை
வினையும்  என   இருவகைத்து. அவற்றுள்  தன்மை  முன் உணர்த்திய
தொடங்கினான்,  தம்மைதானும்  உளப்பாட்டுத்  தன்மை  தனித்தன்மை
என    இருவகைத்து,    அவற்றுள்   உளப்பாட்டுத்   தன்மை   முன்
உணர்த்திய தொடங்கினான் என உணர்க.
  

(இ - ள்.) மேற்  பகுக்கப்பட்ட வினையின் முப்பாகுபாடும்  ஆகிய
அவையாமாறு   இனிச்   சொல்லுவல்;  அம்  ஆம்  எம் ஏம் என்னும்
ஈற்றையுடைய  நான்குவகைச்  சொற்களும்,  உம்மொடு  வருகின்ற கும்,
டும்,  தும்,  றும்   எனப்படுகின்ற  அந்நான்கு  ஈற்றுச்  சொல்லுமாகிய
அவ்வெட்டுச்  சொல்லும்,   அவன்   தன்னோடு   பிறனையும் கூட்டிப்
பன்மையினைச் சொல்லும் தன்மைக்கு உரிய சொல்லாம், (எ - று.)
  

2‘அம் - தாய்வரும்.’  

(எ - டு.)  அம் : -  உண்டனம்,   உண்டிலம்;  உண்ணாநின்றனம்,
உண்கின்றனம்;   உண்ணாநின்றிலம்,   உண்கின்றிலம்   ;    உண்பம்,
உண்குவம், உண்ணலம் எனவரும்.
  

இவற்றுள் நிகழ்காலம் நிற்கின்.................னம்    என்றாற்போல  வரும்
வாய்பாட்டு விகற்பமும் அறிக.
  

இனி   அம்மறை ஒருவாய் பாட்டதாய்ச்சொல் தன்னானே உண்டிலம்
என்றாற்போல     மறுத்து     வருதலே     அன்றி      உண்டனம்
அல்லம்..................வாய்பாட்டான் மறுத்து.............
  

ஆம்  :-  உண்ணாநின்றாம், உண்டாம், உண்டிலாம்,  உண்கின்றாம்,
உண்ணாநின்றிலாம்; உண்பாம், உண்குவாம், உண்ணாம் என வரும்.
  

எம் :- உண்டெம், உண்டிலெம்; உண்ணாநின்றெம்,  உண்கின்றெம்;
உண்ணாநின்றிலெம்,    உண்கின்றிலெம்;   உண்பெம்,    உண்குவெம்;
உண்ணெம் எனவரும்.
  

ஏம் :-  உண்டனேம், உண்டிலேம்; உண்ணாநின்றேம், உண்கின்றேம்;
உண்ணாநின்றிலேம்; உண்பேம், உண்குவேம், உண்ணேம் எனவரும்.
  

இவற்றிற்கும்  உண்டாமல்லெம்,   உண்டாமல்லேம்.............விகற்பமும்
அறிக.
  

இனி,     உம்மொடும்  வரூஉங்  கடதறக்கள் , உண்கும்,  உண்டும்,
வருதும்,  சேறும்  என  எதிர்காலம்  ஒன்றுமே  பற்றி   வரும்  எனக்
கொள்க.
  

இவற்றுள்   மறைவாய்பா........ந்  நாற்கிளவியும்  என்பான்  எண்ணும்
மையினைத் தொகுத்து ஒடு விரித்தார் எனக் கொள்க.            (5)


1.  ‘அவைதாம்’  என்னும்  சொல்   தெய்வச்சிலையார்  உரையில்
இல்லை.
  

2.இப்பகுதி சிதைந்துள்ளது.  

******************************************************************