என் - எனின், உளப்பாட்டுத்தன்மைத்திரிபு கூறுதல் நுதலிற்று, (இ - ள்.) முற்கூறியவற்றுள் உளப்பாட்டுத் தன்மைச் சொற்கள் எண்ணும்போது அஃறிணையையும் உளப்படுத்தித் திரிவன உள (எ - று.) திரிபவை என்னுந் தொழிற்பெயர்....திரிபென்னுந் தொழிலின் மேலது பொருணிலையாக்கித் திரிபுகள் உளவென எட்டன் மேலும் ஏற்றுக. இனித் திரிபவை என்னுஞ் சொல்லினைத் திரிபாகிய அவை என இரண்டாக்கி அவை என்பதுந் தங்கு....ளையாக்கியும் உரைக்க. இனி அவை திரி........அம், ஆம் என்னும் இரண்டும் தன்னோடு முன்னின்றானை உளப்படுக்கும். எம் ஏம் என்னும் இரண்டும் தன்னோடு படர்க்கையானை உளப்படுக்கும். உம்மொடு வரூஉம் கடதறக்கள் நான்கும் அவ்விருவரையும் உளப்படுக்கும் எனக் கொள்க. இச்சூத்திரத்து வேறுபாடுள என்றது அல்லது இவ்வகை விளங்கக் கூறாமையின் இதனை உரையிற் கொள்ளப்படும். (எ - டு.) யானும் நீயும் உண்டனம், யானும் நீயும் உண்டாம்; யானும் அவனும் உண்டனெம், யானும் அவனும் உண்டேம்; யானும் நீயும் உண்டும், உண்கும், வருதும், சேறும்; யானும் அவனும் உண்கும், உண்டும், வருதும், சேறும் என ஒட்டிக்கொள்க. (12) |